/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேதமான குழாயை மாற்றி தண்ணீர் வினியோகம்
/
சேதமான குழாயை மாற்றி தண்ணீர் வினியோகம்
ADDED : அக் 11, 2025 12:28 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஆர்.ஆர்., கார்டன் குடியிருப்பு பகுதியில் கடந்த, 4ம் தேதி கனமழை காரணமாக ஏரி நிரம்பி அப்பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஓடை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமானது. அதனால் கடந்த, 5 நாட்களாக அப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கினர். இது தொடர்பாக காலைக்கதிர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, பஞ்., நிர்வாகம் மூலம் சேதமான குடிநீர் குழாய்கள், நேற்று முன்தினம் சரி செய்யப்பட்டு, நேற்று அதிகாலை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.