/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
/
கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
ADDED : டிச 11, 2024 01:27 AM
கே.ஆர்.பி.,க்கு
நீர்வரத்து சரிவு
கிருஷ்ணகிரி, டிச. 11-
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 737 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 541 கன அடியாக குறைந்தது. அணையில் கடந்த, 63 நாட்களாக, 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.10 அடியாக இருந்தது.
பாரூர் ஏரிக்கு நேற்று முன்தினம், 60 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 12 கன அடியாக குறைந்தது. ஏரி முழு உயரமான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், நீர்வரத்து முழுவதும் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம், 836 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 560 கனஅடியாக சரிந்தது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.78 அடியாக நீர்மட்டம் இருந்ததால், நீர்வரத்து முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது.

