/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம்
/
குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம்
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தை முன் உள்ள சாலையில், ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வந்தது.
இது தொடர்பாக நமது நாளிதழில் கடந்த, 22 ல் செய்தி வெளியானது. இதையடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீத்தாராம் நகர் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு கடந்த, 23 முதல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோல், ஓசூர் மாநகராட்சி என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனி மற்றும் குறிஞ்சி நகர் பகுதி மக்கள், குடிநீர் சீராக கிடைக்காததால் கடந்த, 24ல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான செய்தியும் வெளியானது. இதையடுத்து, என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் உள்ள உள்ள நான்கு தெரு க்கள் மற்றும் இதர பகுதிகளுக்கு நேற்று முன்தினம் முதல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயரமான பகுதியில் உள்ள, 50 வீடுகளுக்கும் மாநகராட்சி தண்ணீர் வினியோகம் செய்துள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சினேகா தெரிவித்துள்ளார்.

