/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நாங்க திட்டங்களை பார்க்கிறோம் அவங்க கோவில்களை பார்க்கிறார்கள்'
/
'நாங்க திட்டங்களை பார்க்கிறோம் அவங்க கோவில்களை பார்க்கிறார்கள்'
'நாங்க திட்டங்களை பார்க்கிறோம் அவங்க கோவில்களை பார்க்கிறார்கள்'
'நாங்க திட்டங்களை பார்க்கிறோம் அவங்க கோவில்களை பார்க்கிறார்கள்'
ADDED : பிப் 18, 2024 10:14 AM
கிருஷ்ணகிரி: ''தி.மு.க., ஆட்சி, திட்டங்களையும், மத்திய அரசு, கோவில் திறப்புகளையும் பேசி வருகின்றனர்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட, தி.மு.க., சார்பில் டோல்கேட் அருகில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாவட்ட பொறுப்பு அமைச்சர், சக்கரபாணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலாளர்களுமான மதியழகன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர மேயரும், நகர செயலாளருமான சத்யா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
தமிழக முதல்வர், பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, காலை உணவுத்திட்டம் இது போன்ற திட்டங்களை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் நிதி நிலைமை குறித்தும், தமிழகத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கூறியும், அவர்கள் கோவில், நாடாளுமன்ற புதிய கட்டடம், கத்தாரில் ஹிந்து கோவில் உள்ளிட்டவற்றை கூறி ஓட்டு கேட்கின்றனர். நம் மாநிலத்தற்கு எதிரான, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மற்றும் நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இத னால், இந்தியாவில், எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தோடு தகராறு செய்து, நம்மை பணிய வைக்கும் முயற்சிகள் நடக்கிறது. தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு கூட நிதி ஒதுக்காத மத்திய அரசை, நாம் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.