'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஜூன் 29, 2026 05:59 AM
ஊத்தங்கரை; ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. முகாமை முன்னாள் எம்.பி., நரசிம்மன் துவக்கி வைத்தார். இயக்-கத்தின் பொறுப்பாளர் ஆடிட்டர் மகாராஜன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் வரதன் முன்-னிலை வகித்தார்.
இம்முகாமில் முன்னாள் எம்.பி., நரசிம்மன் கலந்து கொண்டார். அவர் புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் இணைத்து, உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, முகாமில் இணைந்தவர்க-ளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியு-றுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்-டன.இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளை-ஞர்கள் திரளானோர் ஆர்வமுடன் வந்து, தங்-களை, 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். நிகழ்வில், பலர் கலந்து கொண்-டனர்.
