/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்
/
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்
ADDED : ஜன 15, 2025 12:38 AM
கிருஷ்ணகிரி, :
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவிலுள்ள, நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், தை பிறப்பையொட்டி, 44ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.
இதையொட்டி அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு பூஜை செய்து, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க காலை, 7:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன், கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல், தை பொங்கல் திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி டான்சி செல்வ விநாயகர் கோவில், காந்திநகர் சக்தி விநாயகர் கோவில், பழைய வீட்டுவசதி வாரிய குடி
யிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவில்களில், விநாயகருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து படைக்கப்பட்டது.