/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
/
காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
ADDED : மார் 05, 2025 08:25 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., கட்சி முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சுப்பிரமணியனின், இளைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும், 12ல் காவேரிப்பட்டணம் கே.ஆர்.வி., மஹாலில் நடக்க உள்ளது. இதில், மணமக்கள் டாக்டர் சோனியா, டாக்டர் சரவணநாதன் ஆகியோரை வாழ்த்த வருகை தருமாறு, தமிழக, காங்., கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, சுப்பிரமணியன் குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கினர். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத், மயிலாடுதுறை எம்.பி., சுதா ராமகிருஷ்ணன், முன்னாள் தமிழக, காங்., கட்சி தலைவர் திருநாவுக்கரசரின் மகனும், அறந்தாங்கி எம்.எல்.ஏ.,வுமான ராமசந்திரன் உட்பட பலருக்கு அழைப்பிதழ்களை வழங்கினார்.
இந்த திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை வாழ்த்த வருமாறு, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ.,விடம், காவேரிப்பட்டணத்திலுள்ள அவரது இல்லத்தில், சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் பழனிசாமி, கர்ணன், குணசேகரன், காங்., நிர்வாகிகள் முத்துக்குமார், தவமணி, கோவிந்தன், வேடி உடனிருந்தனர்.