/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
களை பறிமுதல் செய்தனர். 2 கார்களில் கடத்தி வந்த 400 கிலோ குட்கா பறிமுதல்

ADDED : செப் 21, 2025 01:08 AM
ஓசூர், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, சிப்காட் ஸ்டேஷன் போலீசார் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியிலிருந்து வந்த, மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட பார்ச்சூனர் கார் மற்றும் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட கிரீட்டா கார் ஆகியவற்றை சோதனை செய்ய நிறுத்தினர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர்கள், சிறிது தொலைவிற்கு முன்பாக கார்களை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.
சந்தேகமடைந்த போலீசார் கார்களில் சோதனை செய்தபோது தலா, 200 கிலோ எடையில், தடை செய்யப்பட்ட, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. கார்களுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். மேலும், புகையிலை பொருட்கள் எந்த பகுதிக்கு கடத்தி செல்லப்பட இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.