/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' பஸ் திட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை துவக்கம்
/
'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' பஸ் திட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை துவக்கம்
'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' பஸ் திட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை துவக்கம்
'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' பஸ் திட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை துவக்கம்
ADDED : பிப் 04, 2025 05:40 AM
ஓசூர்: காவேரி மருத்துவமனை குழுமம் துவங்கி, 26 ஆண்டுகள் கடந்-ததை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில், 'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவி-களை உள்ளடக்கிய பஸ் போன்ற வாகனத்தை, காவேரி மருத்துவமனை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், சிறு, குறுந்தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறு-வனங்களுக்கு நேரடியாக சென்று,
தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை எளிதாக செய்ய முடியும். அதனால் உடல்
பரிசோதனைக்காக, தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வரும் நேரம் குறையும். தொழில் நிறுவனங்களின்
உற்பத்தி திறனை அதிகரிக்க இயலும் என, காவேரி மருத்துவமனை குழு செயல் இயக்குனர் விஜயபாஸ்கரன்
தெரிவித்துள்ளார்.'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' பஸ் திட்டத்தை, ஏத்தர் எனர்ஜி நிறுவ-னத்தில் இயக்குனர் (கார்ப்பரேட் சர்வீஸ்)
ஸ்ரீகாந்த் விஷ்வேஸ்-வரன் மற்றும் பாரத் பிரிட்ஸ் வெர்னர் நிறுவன அசோசியேட் துணைத்தலைவர் (உற்பத்தி)
மரியா சகாயராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.காவேரி மருத்துவமனை வணிக மேம்பாடு உதவி பொதுமே-லாளர் பிந்துகுமாரி, மருத்துவ இயக்குனர் அரவிந்தன், துணை மருத்துவ நிர்வாகி ஸ்ரீராமஜெயம், மூத்த பொதுமேலாளர் ஜோஸ் வர்க்கீஸ் ஜாய் உட்பட பலர் பங்கேற்றனர்.