/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 04, 2025 08:30 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில், இன்று (ஆக.4) மதியம், 12:00 மணிக்கு, மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.