/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
ADDED : நவ 23, 2025 12:49 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், ஓசூரிலுள்ள தளி சாலையில், மாநில அளவிலான கபடி போட்டி நடக்க உள்ள மைதானத்தில் நேற்று நடந்தது.
மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர்., வேண்டாம் என, நாங்கள் கூறவில்லை. ஆனால் அதற்கு ஏன் கால அவகாசம் வழங்கவில்லை என்று தான் கேட்கிறோம்.
12 ஆண்டுகளாக, மத்திய அரசு ஏன் எஸ்.ஐ.ஆரை கொண்டு வரவில்லை. அது கொண்டு வரப்பட்டாலும், அடுத்த முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை வரும், 27ம் தேதி முதல், ஒரு மாதம் கொண்டாட வேண்டும்,'' என்றார்.
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச்செயலாளர் மாதேஸ்வரன், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

