ADDED : ஜூலை 04, 2026 04:36 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், மாங்கனி கண்காட்சி எப்போது துவங்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்-ளனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானத்தில், 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான பூமி பூஜை கடந்த மாதம், 20ம் தேதி நடந்தது. கண்காட்சியில், மா கண்காட்சி அரங்கம், மலர் கண்காட்சி அரங்கம், 50 அரசுத்-துறை அரங்கு, 80 தனியார் அரங்கு, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாக-னங்கள் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, கழிப்-பறை வசதி போன்றவை அமைக்கும் பணி கடந்த, 10 நாட்களாக நடந்து, 90 சதவீதம் நிறைவ-டைந்துள்ளது. கண்காட்சி மொத்தம், 26 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைப்பதாக அறிவித்த நிலையில், இதுவரை தேதி அறிவிக்-கப்படவில்லை. மாங்கனி கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஜூன் மாதம் துவங்க வேண்டிய மாங்கனி கண்காட்சி, ஜூலை வந்தும் தேதியை அறிவிக்கவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
