ADDED : செப் 18, 2026 01:44 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த, 3 நாட்களாக இரவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிக-பட்சமாக தளியில், 50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், ஓசூர், 7, கே.ஆர்.பி., அணை, 5.40, கிருஷ்ணகிரி, சின்-னாறு அணை தலா, 2, சூளகிரி, 1.50 மி.மீ., என மொத்தம், 67.9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்து கொண்டிருக்கும், 365 கன அடி நீரை, வாய்க்-காலில், 162 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 203 கன அடி என மொத்தம், 365 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
