ADDED : பிப் 16, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த அம்மன் கோவில் பிரிவை சேர்ந்தவர் பழனிச்சாமி. தொழிலாளியான இவரது மனைவி கவுரி, 32; கடந்த, ௧2ம் தேதி பஸ் ஸ்டாண்ட் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. இந்நிலையில் பழனிச்சாமி புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர். * கோவை மாவட்டம் சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த வேலுசாமியின், 16 வயதான மகள், சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 12ம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வேலுசாமி புகாரின்படி, சத்தி போலீசார் மாணவியை தேடிவருகின்றனர்.