/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாட்டு துப்பாக்கி ஒப்படைக்க கெடு வன உயிரின காப்பாளர் அறிவிப்பு
/
நாட்டு துப்பாக்கி ஒப்படைக்க கெடு வன உயிரின காப்பாளர் அறிவிப்பு
நாட்டு துப்பாக்கி ஒப்படைக்க கெடு வன உயிரின காப்பாளர் அறிவிப்பு
நாட்டு துப்பாக்கி ஒப்படைக்க கெடு வன உயிரின காப்பாளர் அறிவிப்பு
ADDED : ஆக 19, 2025 03:21 AM
ஓசூர், ஓசூர் வனக்கோட்டத்தில், உரிமம் அற்ற நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து அவற்றை ஒப்படைக்க வேண்டும். இல்லா விட்டால், மோப்பநாய் மூலம் சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் வனக்கோட்டத்திலுள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளை, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மூலம், வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், வனத்துறையினர் அல்லது போலீசார் அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடம், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது, வனக்குற்ற வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது.
அடுத்த மாதம், 10ம் தேதிக்கு பின், போலீசாருடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மூலம், மலை கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சோதனை செய்யப்பட உள்ளது. இச்சோதனையில் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டு
பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர வனச்சட்டங்கள் மூலம், போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

