/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?
/
நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?
நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?
நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?
ADDED : அக் 30, 2025 01:35 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி பகுதியில், திருப்பத்துார் - தர்மபுரி மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் மத்துாரிலிருந்து,
8 கி.மீ., தொலைவில் உள்ள, போச்சம்பள்ளி செல்வதற்குள், 7க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால், மழைக்காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை அறியாமல், வேகமாக சென்று விபத்தில் சிக்கி வருவது அன்றாடம் நடக்கிறது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச, வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.