/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி
/
விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி
விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி
விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி
ADDED : ஜன 07, 2024 03:22 PM

கிருஷ்ணகிரி: '' இ.பி.எஸ்., விரைவில் திகார் சிறைக்கு செல்வார் என்று பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம்; சரியான நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன்'' என கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து இ.பி.எஸ்., அ.தி.மு.க., பொதுச்செயலாளராகி உள்ளார். அதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அ.தி.மு.க., மீட்புகுழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.
இரு அணிகளாக செயல்பட்டு ஓட்டுக்களை உடைப்பதால் தான் அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியவில்லை. இ.பி.எஸ்., முதல்வராகி, பொதுச்செயலாளர் ஆன பின் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். அ.தி.மு.க.,வின் பல பிரிவுகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும்.
ஏற்கனவே டி.டி.வி., தினகரனுடன் இணைந்து விட்டோம். கொள்கை ரீதியாக அவர்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படவுள்ளார். அதை அவரே விரைவில் அறிவிப்பார். நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் கட்சியின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றம் இ.பி.எஸ்., ஆஜராக வேண்டும் எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறியதையும் வரவேற்கிறோம். லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இது குறித்து முதலில் செய்தியாளர்களுக்கு தான் சொல்வோம். இ.பி.எஸ்., விரைவில் திகார் சிறைக்கு செல்வார் என்று பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம்; சரியான நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.