/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம் கலெக்டர் அலுவலகம் முன் 6 குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
/
சேலம் கலெக்டர் அலுவலகம் முன் 6 குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகம் முன் 6 குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகம் முன் 6 குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஏப் 22, 2025 01:55 AM
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன், ஆறு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ரெட்டியூர் புது காலனியை சேர்ந்த மாரிமுத்து மனைவி சத்யா, 30. இவர் நேற்று தனது, நான்கு பெண் குழந்தைகள், இரு ஆண் குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின் அவர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சத்யாவிடம் இருந்து கேனை பிடுங்கி,
விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது: நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன், 2 சென்ட் வீட்டு மனை நிலத்தை அரசு இலவசமாக வழங்கியது. இதில் நாங்கள் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், எங்கள் பகுதியை சேர்ந்த இருவர் வீட்டை காலி செய்யுமாறு, மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பாக வாழ வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி, சத்யாவை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.