தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை

அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை

அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை


ADDED : நவ 15, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி: அஞ்செட்டி அருகே, வீட்டில் அழுகிய நிலையில் பெண் உடல் மீக்ப்பட்டது.

கழுத்தில் காயத்துடன் உடல் கிடந்ததால், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி மாதம்மாள், 45. இவர்களுக்கு செல்லியம்மாள், 23, என்ற மகளும், சந்தோஷ், 20, சம்பத்குமார், 18, என்ற இரு மகன்களும் உள்ளனர். செல்லியம்மாளுக்கு திருமணமாகி விட்டது. மகன்கள் கர்நாடகா மாநிலத்தில் தங்கி, கூலி வேலை செய்கின்றனர். வீரபத்திரன் கடந்த, 4 ஆண்டுக்கு முன் இறந்து விட்டதால், மாதம்மாள் மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். ஊரின் ஒதுக்குபுறத்தில் இவரது வீடு அமைந்துள்ளது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு, மகன்கள் இருவரும் வீட்டிற்கு வந்து, தாய் மாதம்மாளை பார்த்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று, மாதம்மாள் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அஞ்செட்டி போலீசார் சென்று பார்த்த போது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. ஒரு அறையில் மாதம்மாள் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அருகே கட்டில் இருந்த போதும், மாதம்மாள் தரையில் சடலமாக கிடந்ததால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கழுத்து பகுதியில் காயமும், அங்கு ரத்தம் உறைந்து கிடப்பதாவும், சடலத்தின் அருகே சிறிய கத்தி ஒன்றும் கிடப்பதாகவும், மாதம்மாள் இறந்து, 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவும், போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், மாதம்மாள் சாவிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தெரிவித்த அஞ்செட்டி போலீசார், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என விசாரிப்பதாகவும், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்துள்ளதாகவும்

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us