ADDED : ஏப் 02, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம், காரிமங்கலம் அருகே, பூ வியாபாரம் செய்ய சென்ற பெண்ணிடம், செயின் பறித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து, கரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 60. இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த, 30 அன்று அதிகாலை, 5:00 மணிக்கு லட்சுமி பூ வியாபாரம் செய்வதற்காக கிட்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
