/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்கள் கேதார கவுரி விரதம் சுவாமிக்கு அதிரசம் படைத்து வழிபாடு
/
பெண்கள் கேதார கவுரி விரதம் சுவாமிக்கு அதிரசம் படைத்து வழிபாடு
பெண்கள் கேதார கவுரி விரதம் சுவாமிக்கு அதிரசம் படைத்து வழிபாடு
பெண்கள் கேதார கவுரி விரதம் சுவாமிக்கு அதிரசம் படைத்து வழிபாடு
ADDED : அக் 22, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, கேதார கவுரி விரதம் என்பது கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரியாமல் இறுதி வரை மகிழ்வுடன் வாழ கடைபிடிப்பதாகும். இந்த விரதத்தை கடைபிடிக்கும் தம்பதி இருவரும், லட்சிய தம்பதிகளாக வாழ்வார்கள். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை தொடர்ந்து, 21 நாட்களுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட வேண்டும்.
நேற்று, கேதாரி கவுரி விரதத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி சாலை கடைவாசல் மாரியம்மன் கோவில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழைய சப்-ஜெயில் சாலை வரசித்தி விநாயகர் கோவில்களில், பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தை படைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். கவுரி அம்மனுடன் சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.