/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 நாள் வேலை திட்டத்தில் 6 மாத ஊதியம் வரவில்லைஉயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட பெண்கள்
/
100 நாள் வேலை திட்டத்தில் 6 மாத ஊதியம் வரவில்லைஉயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட பெண்கள்
100 நாள் வேலை திட்டத்தில் 6 மாத ஊதியம் வரவில்லைஉயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட பெண்கள்
100 நாள் வேலை திட்டத்தில் 6 மாத ஊதியம் வரவில்லைஉயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட பெண்கள்
ADDED : ஏப் 19, 2025 01:10 AM
ஓசூர், நுாறு நாள் வேலை திட்டத்தில், 6 மாதமாக ஊதியம் வரவில்லை என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் பெண்கள் முறையிட்டனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 1,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் துவக்க விழா ஓசூரில் நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா தலைமை வகித்து, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லதா, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை ஆகியோருடன் இணைந்து, ஓசூர் - தளி சாலையோரம், கர்னுார் பகுதியில் நேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
விழாவை முடித்து கொண்டு புறப்பட்ட நீதிபதி ஹேமலதா, அங்கு திரண்டிருந்த அச்செட்டிப்பள்ளி, பஞ்சேஸ்வரம், பூனப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, எஸ்.முதுகானப்பள்ளி பஞ்.,க்களை சேர்ந்த, 80 க்கும் மேற்பட்ட பெண்கள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசின் திட்டங்களை பெற, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம் என கூறிய நீதிபதி ஹேமலதா, வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என பெண்களிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த பெண்கள், 'நவ., முதல் தற்போது வரை, 6 மாதமாக, 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வரவில்லை. இதுவரை, 300 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் முதல், 100 ரூபாய் தான் ஊதியம் தர முடியும் என கூறுகின்றனர். அதை வைத்து எண்ணெய் கூட வாங்க முடியாது' என தெரிவித்தனர். அதற்கு நீதிபதி அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ''அக்., நான்காவது வாரம் வரை மட்டுமே, மத்திய அரசிடம் இருந்து நிதி வந்துள்ளது. அதன் பின் வரவில்லை. வந்தவுடன் வழங்கப்படும். அத்துடன், நீங்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்றார்போல் ஊதியம் வழங்கப்படும்,'' என்றார்.
எழுத்துப்பூர்வமாக மனு கொடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா, மாவட்ட முதன்மை நீதிபதி லதா ஆகியோர் தெரிவித்தனர்.
--

