ADDED : நவ 29, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி புதுாரில் திம்மராயசுவாமி கோவிலில் குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி பெண்கள் பாரம்பரிய முறைப்படி, தேங்காய், பழம், பூக்கள், வெல்லம், உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கூடைகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து, திம்மராயசுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில், பெண்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சின்னமுத்துார் அகமுடையார் நலச்
சங்கத்தினர் செய்திருந்தனர்.
