/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரம்மதேவர் கோவிலுக்கு பெண்கள் பால்குட ஊர்வலம்
/
பிரம்மதேவர் கோவிலுக்கு பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 12, 2025 07:08 AM
ஓசூர்: ஓசூர், பிரம்மதேவ சரஸ்வதி மலை நல அறக்கட்டளை சார்பில், 14 ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக, ஓசூர் முல்லை நகர் காயத்திரி அம்மன் கோவிலில் பால்குடங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, பிரம்மதேவர் மலைக்கு, ராயக்கோட்டை சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தைப்பூசத்தையொட்டி மலையிலுள்ள பிரம்மதேவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், முன்னாள் செயலாளர் பிரவீன்குமார், அ.தி.மு.க., பகுதி செயலாளர் ராஜி, கவுன்சிலர்கள் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், லட்சுமி ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

