ADDED : ஜூலை 07, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுமன், 42. கிருஷ்-ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கலுகொண்டப்-பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
தன் சொந்த ஊரிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த சுமன், கலுகொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மத்திகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சுமன் தன் வீட்டின் அருகே, 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்து, அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
