ADDED : ஜூலை 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தளி அடுத்த திப்பேன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடராஜூலு, 28. கட்டட தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, பேலகொண்டப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார். அப்போது, பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த முனிரங்கா, 38, என்பவர் ஓட்டி வந்த, பஜாஜ் சி.டி., 100 பைக், வெங்கடராஜூலு சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடராஜூலு, ஓசூர் அரசு மருத்துவம
னையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். முனிரங்காவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.