ADDED : மார் 07, 2026 09:35 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, வால்பாறை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி போக்கிரி ராஜா, 42. இவர் நேற்று டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வந்து விட்டு, மீண்டும் போச்சம்பள்ளி செல்வதற்காக நேற்று மதியம், 12:15 மணிக்கு சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பிரிவு சாலையை கடந்து சென்றார்.
அப்போது, பெங்க ளுருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ஆம்னி பஸ், மொபட் மீது மோதியது. இதில், போக்கிரி ராஜா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
