sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மெழுகுவர்த்தியால் சோபாவில் தீ உடல் கருகி தொழிலாளி பலி

/

மெழுகுவர்த்தியால் சோபாவில் தீ உடல் கருகி தொழிலாளி பலி

மெழுகுவர்த்தியால் சோபாவில் தீ உடல் கருகி தொழிலாளி பலி

மெழுகுவர்த்தியால் சோபாவில் தீ உடல் கருகி தொழிலாளி பலி


ADDED : டிச 25, 2025 08:07 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், மெழுகுவர்த்தி விழுந்து, சோபா தீப்பிடித்ததில், உடல் கருகி தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தைமேட்டு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி, 55. கூலித்தொழிலாளி; அப்பகுதியில் சிமென்ட் ஷீட் மற்றும் அட்டை பெட்டிகளை வைத்து, வீடு கட்டி வசிக்கிறார். இவரும், பெட்டமுகிலாளம் அடுத்த தாசக்கொல்லையை சேர்ந்த கூலித்தொ-ழிலாளி மாதப்பா, 55, என்பவரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் இரவு இருவரும், பெரியசாமி வீட்டில் மது அருந்தினர். சேபாவில் மாதப்பாவும், தரையில் பெரியசாமியும் துாங்கினர்.

வெளிச்சத்துக்காக இருவரும் வீட்டில் மெழுகு-வர்த்தியை எரிய வைத்திருந்தனர். இரவு, 11:00 மணிக்கு மெழுகுவர்த்தி சாய்ந்து, சோபாவில் விழுந்து தீப்பிடித்து, வீடு முழுவதும் தீ பரவியது. இதில் மாதப்பா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.பெரியசாமி வெளியே ஓடியதால், வலது காலில் தீக்காயத்துடன் உயிர் தப்பினார். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us