ADDED : மே 16, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; கர்நாடகா
மாநிலம், பெங்களூரு பொம்மன-ஹள்ளி அருகே கெங்கசந்திராவை சேர்ந்தவர்
செலுவப்பா, 62, கூலித்தொழிலாளி; கடந்த, 13ம் தேதி தனது சொந்த ஊரான,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஒசட்-டியில் உள்ள தனது
அண்ணன் கோங்கப்பா என்ப-வரது வீட்டிற்கு சென்றார்.
அன்று காலை
வீட்டி-லிருந்து வெளியே சென்றவர் இரவு வெகுநேரமா-கியும் திரும்பி வரவில்லை.நேற்று
முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஒசட்டி கிராமத்தில் உள்ள ரகுபதி ஏரியில்
செலுவப்பா சடலம் மிதந்து கொண்டிருந்தது. போலீசார் விசாரணையில்,
குளிப்பதற்காக ஏரிக்குள் இறங்-கிய செலுவப்பா, ஆழமான பகுதிக்கு சென்று,
நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது.
தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்-குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
