ADDED : மே 10, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
சூளகிரி: பாலக்கோடு அடுத்த தண்டுகாரனஹள்ளி அருகே வெள்ளிச்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் குமார், 40, கட்டடங்களுக்கு அலுமினிய பேப்ரிகேசன் செய்யும் பணி செய்து வந்தார்.
கடந்த, 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சுண்டகிரி பகுதியிலுள்ள தனியார் கட்ட-டத்தின், 2வது மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயம-டைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
