/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
டிராக்டரில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : நவ 13, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்போடிபுடி தேவய்யா, 49. கூலித்-தொழிலாளி; கடந்த, 10ம் தேதி, ஓசூர் மத்திகிரி கூட்ரோடு - அந்-திவாடி கூட்ரோடு இடையே, மாநில நெடுஞ்சாலையில் டிராக்-டரில் அமர்ந்து சென்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் யாதவ், 21, என்-பவர், டிராக்டரை ஓட்டினார். மத்திகிரி ரோட்டரி கிளப் அருகே சென்றபோது, டிராக்டரிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அம்போடிபுடி தேவய்யா, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்-தினம் காலை உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.

