ADDED : ஏப் 10, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
அஞ்செட்டி : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் அருகே ஜீன்மநத்தம் மலை கிராமத்தில், பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று மதியம் அலங்கரித்த தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.
மாலை, 5:30 மணிக்கு தேரோட்டத்தை தரிசனம் செய்ய, ஜீன்மநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், 30, என்பவர் வந்தார். அவர், கூட்ட நெரிசலில் சிக்கி, தேர் சக்கரத்தில் விழுந்தார்.அப்போது அவர் மீது தேர் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
