உயர்மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி கீழே விழுந்து பலி
உயர்மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி கீழே விழுந்து பலி
ADDED : ஜூன் 01, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை; ஊத்தங்கரை அடுத்த, தளபதி நகர் கிராமத்தின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் செல்கிறது.
இதில் தளபதி நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன், 31, நேற்று 3:00 மணியளவில் மது போதையில் ஏறினார். உச்சிவரை சென்று அங்கே அமர்ந்து சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி விடலாம் என இறங்கி வந்த போது, 60 அடி உயரத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்பக்க மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
