ADDED : செப் 30, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அடுத்த அரசகுப்பம் அருகே பென்சிப்பள்ளியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50. கூலித்தொழிலாளி; இவரது மகள் ரேணுகா, 23, மருமகன் சகாதேவன், 25, மற்றும் உறவினர் சிவருத்திரன், 13, ஆகியோருடன், ஒரே பஜாஜ் பல்சர் பைக்கில், நேற்று முன்தினம் மாலை, ஜவளகிரியிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றார். சகாதேவன் பைக்கை ஓட்டினார்.
ஒசட்டி ஏரி அருகே மாலை, 5:00 மணிக்கு, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனமும், பைக்கும் மோதிக் கொண்டன. இதில் பைக்கில் சென்ற, 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். சகாதேவன், ரேணுகா, சிறுவன் சிவருத்திரன் ஆகிய, 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.