/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி எருது விடும் விழாவில் காளை முட்டியதில் தொழிலாளி பலி
/
கிருஷ்ணகிரி எருது விடும் விழாவில் காளை முட்டியதில் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி எருது விடும் விழாவில் காளை முட்டியதில் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி எருது விடும் விழாவில் காளை முட்டியதில் தொழிலாளி பலி
ADDED : ஜூன் 24, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழைய பேட்டை நேதாஜி சாலையில் அனைத்து சமுதாய மக்கள் இணைந்து, 15ம் ஆண்டு எருதுவிடும் விழாவை நேற்று நடத்தினர். பழையபேட்டையிலிருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில், காளைகள் ஓடவும், மக்கள் வேடிக்கை பார்க்கவும் தடுப்பு அமைத்தனர். ஆனால் விழாவுக்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிகிறது.
இதில், 300 மாடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. சீறிப்பாயும் காளைகளை பார்க்க, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். நேற்று மதியம் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து சென்றன.
அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவரை ஒரு காளை முட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார். விசாரணையில் திருப்பத்துார் மாவட்டம் பொம்மகுப்பத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி அஜித்குமார், 24, என தெரிந்தது. ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். விழாவை காண வந்தநிலையில் காளை முட்டி பலியாகி விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.