ADDED : மே 08, 2026 07:18 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர் அடுத்த பெலத்துாரை சேர்ந்தவர் ராமதாஸ், 45, கட்டட தொழிலாளி. கடந்த, 5ம் தேதி இரவு, 8:00 மணியளவில் லிங்காபுரம் அருகே பேரிகை - பாகலுார் சாலையில் நின்றிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத சிவப்பு நிற கார் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
