/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெமிக்கல் டிரம் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
/
கெமிக்கல் டிரம் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார், 29. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் உள்ள தனியார் மார்பிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 14ம் தேதி இரவு, 7:30 மணிக்கு பணியில் இருந்த அஜய்குமார், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட கெமிக்கல் டிரம்மை திறந்தார். அப்போது, டிரம் வெடித்து, அவரை துாக்கி வீசியது. இதில் நிறுவனத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது அவரது தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

