ADDED : மே 10, 2026 01:16 AM

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகா-னப்பள்ளியை சேர்ந்தவர் பில்லப்பா, 44. கூலித்தொழிலாளி. இவர் மனைவி மாதேவம்மா, 40. இவர்களுக்கு மகன், மகள் உள்-ளனர். நேற்று காலை, 6:30 மணிக்கு அக்கிராமத்திலுள்ள வனப்ப-குதியை ஒட்டிய மாரியம்மன் கோவில் அருகே, பழைய பாட்டில்-களை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது வனத்திலிருந்து வெளியேறி அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, பில்லப்-பாவை தாக்கியது. அவர் உயிரிழக்கும் வரை தொடர்ந்து யானை தாக்கியதால், கால் ஒன்று துண்டாகி, உடல் உறுப்புகள் சிதைந்து, சம்பவ இடத்திலேயே பில்லப்பா பலியானார்.
பில்லப்பா, நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் காலை, 9:30 மணிக்கு குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அங்கு யானை தாக்கி அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. தேன்கனிக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினரும் விசாரணை மேற்-கொண்டனர். முதற்கட்டமாக, 50,000 ரூபாயை, உயிரிழந்த பில்-லப்பா குடும்பத்தினரிடம் வழங்க, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
