ADDED : செப் 30, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; தர்மபுரி மாவட்டம், பெரியகுருப்பட்டியை சேர்ந்-தவர் சரவணன், 52, கூலித்தொழிலாளி. கடந்த, 25ல், பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஒரு ஷெட்டில் இருந்த இரும்பு தகடுகளை அகற்றும்போது தவறி விழுந்தார்.
படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
