நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கீரப்பா, 24. அப்பகுதியிலுள்ள துணிக்கடையில் வேலை பார்த்துள்ளார். கடந்த, 1ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரின் பெற்றோர் புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர், வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் வெங்கடாச்சாரி, 52, கட்டட தொழிலாளி. கடந்த, 13ல் தன் மகள் வீடு உள்ள சூளகிரி அடுத்த மடத்துாருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். வெங்கடாச்சாரி மனைவி புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.