ADDED : ஜூலை 09, 2026 02:23 AM
ஓசூர்: ஓசூர் அருகே, வீட்டில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே திப்பாளத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா, 52. கூலித்தொழிலாளி.
இவருக்கும், அதே பகு-தியை சேர்ந்த உறவினர்களுக்கும் கடந்த, 2ம் தேதி ஏற்பட்ட தக-ராறில் திம்மராயப்பா காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தன் உற-வினர்கள் என்பதால், வழக்கு வேண்டாம் என கூறியதால், ஹட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர், சிக்கன் சாப்-பிட்டு விட்டு வீட்டின் அறையில் துாங்க சென்றுள்ளார். நேற்று காலை அவர் வெகு நேரமாகியும் எழுந்து வராததால், குடும்பத்-தினர் சென்று பார்த்தபோது, திம்மராயப்பா இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், ஹட்கோ போலீசார், அவரின் சடலத்தை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோ-தனை அறிக்கை வந்த பின் தான், கடந்த, 2ம் தேதி திம்மரா-யப்பா தாக்கப்பட்டதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் கார-ணமா என, தெரியவரும் என்று, போலீசார் தெரிவித்தனர்.
