ஷிப்ட் முறையை மாற்றக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஷிப்ட் முறையை மாற்றக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் தனியார் நிறுவனம் இயங்குகிறது.
இங்கு பணியாற்றும் பெண்களுக்கு, பொது ஷிப்ட் மற்றும் முதல் ஷிப்ட் என மாறி, மாறி சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது. பத்தலப்பள்ளி பகு-தியில், மேம்பால பணிகள் நடப்பதால், பொது ஷிப்டிற்கு சென்று வர, தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, ஏற்கனவே இருந்தது போல் முதல் ஷிப்டில் மட்டுமே பணி வழங்க வலியுறுத்தி, பெண் தொழிலாளர்கள் நேற்று மாலை நிறுவனம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிறுவன தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் மாரிமுத்து, தலைவர் வெங்க-டேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
