தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு பயிலரங்கம்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு பயிலரங்கம்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு பயிலரங்கம்


ADDED : ஜன 29, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு குறித்த பயிலரங்கம் நடந்தது. இந்திய மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகங்களின் பேரவை தலைமை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:கிருஷ்ணகிரியை எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் மாவட்டமாக நிலைநிறுத்தும் வகையில் கூட்டம் நடக்கிறது. எதிர்கால தொழில்துறை நிலப்பரப்பு குறைந்த கார்பன் உற்பத்தி, பொறுப்பான ஆதாரம் மற்றும் காலநிலை எதிர்ப்பு செயல்பாடுகள் குறித்த விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம், கிருஷ்ணகிரி, நிலையான தொழிற்சாலைகளின் மையமாகவும், பசுமை வினியோக சங்கிலிகளில் நம்பகமான இணைப்பாகவும், நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. நிர்வாகம் செயல்படுத்தி எளிதாக்கும் அதே வேளையில், இந்த மாற்றம் தொழில்துறையால் வழிநடத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், தொழில் பாதுகாப்பு துணை இயக்குனர் உமாபாரதி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us