/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
/
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 02, 2025 02:27 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் ஆராதனா தொண்டு நிறுவனம் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சப்-கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஏரித்தெரு, எம்.ஜி., ரோடு, தாலுகா அலுவலக சாலை வழியாக, காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் சென்று நிறைவு பெற்றது.
முன்னதாக, சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆராதனா தொண்டு நிறுவன நிர்வாகி ராதா தலைமையில், கல்லுாரி மாணவ, மாணவியர் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
எய்ட்ஸ் நோய் பரவும் விதம் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள், நோய் அறிகுறிகள் குறித்து விளக்கமளித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

