/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக தாய்ப்பால் வார விழா ஜி.ஹெச்.,ல் கொண்டாட்டம்
/
உலக தாய்ப்பால் வார விழா ஜி.ஹெச்.,ல் கொண்டாட்டம்
ADDED : ஆக 07, 2024 06:41 AM
ஓசூர்: ஓசூர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.
முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமை வகித்தார். குழந்தை மருத்துவர் சக்திவேல், மகப்பேறு மருத்துவர் பார்வதி ஆகியோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். விழாவில் பங்கேற்ற, 61 தாய்மார்களுக்கு வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், கல்லுாரி மாணவியருக்கு தாய்ப்பால் நன்மைகள் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மருத்துவர் சக்திவேல் பேசும்போது, பெண் ஒருவருக்கு, 750 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி, அக்குழந்தை தற்போது, 3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி, அக்குழந்தை மற்றும் தாயை, மற்ற தாய்மார்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆராதனா அறக்கட்டளை நிறுவனர் ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.