ADDED : செப் 03, 2025 01:21 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, கோட்டப்பட்டியில், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம், ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, ஓசூர் அதியமான் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உதவும் கரங்கள் அமைப்பினர் ஒன்றிணைந்து, நேற்று கோட்டப்பட்டியில் உலக தேங்காய் தினம் கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி முன்னிலையில், தென்னையில் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அதேபோல் தேங்காயில் அன்றாட மக்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும், 1,000க்கும் மேற்பட்ட பொருட்களின் வகைகளை, கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதை கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார். எஸ்.பி., தங்கதுரை, பையூர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அனீசாராணி, ஓசூர் அதியமான் கல்லுாரி செயலாளர் இலாசியா தம்பிதுரை, இயற்கை மருத்துவர் தஞ்சை சித்தர் உள்ளிட்டோர், கண்டு ரசித்தனர்.
இதில், வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர். இதில், நக்கீரன் கோபால், 'தென்னைகளின் அரசன் அரசம்பட்டி' என்ற நுாலை வெளியிட்டார்.