/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காணொலி காட்சி மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
/
காணொலி காட்சி மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
ADDED : ஜன 08, 2024 11:02 AM
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வெளிநாட்டினர் மற்றும் பிற மாநில தொழில் முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று துவங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள், காணொலி காட்சி மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி, ஓசூர் சிப்காட், போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சரயு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் மற்றும் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
* ஓசூர் சிப்காட் பேஸ், 2ல் உள்ள
இன்டஸ்டிரியல் இன்னோவேஷன் சென்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, மாநகராட்சி கமிஷனர் சினேகா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன்,
வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.