ADDED : மே 19, 2026 02:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், நேற்று உலக அருங்காட்சியகங்கள் தினம் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10,400 ஆண்டுகளுக்கு முன், மனிதன் பயன்படுத்திய இடைக்கற்கால கற்கருவிகள் கண்டறியப்-பட்டு, புதிய கற்காலம், 5,000 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய வரட்டனப்பள்ளி, ஒப்பதவாடி, தட்டக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கற்கருவிகள் ஆகியவை, அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. பனகமுட்டல் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட, 8ம் நுாற்-றாண்டு வட்டெழுத்துடன் கூடிய நடுகல், செல்லகுட்டப்பட்டி ஜல்லிக்கட்டு நடுகல், இசை கலைஞர்களுக்கான நடுகல் ஆகி-யவை காட்சி படுத்தப்பட்டுள்ளது. 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் புதைப்படிவங்கள், தென்-பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட யானை பல்லின் புதைப்படிவங்கள் ஆகியவையும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்-ளது.
இவ்வாறு காட்சி படுத்தப்பட்டுள்ள பல வரலாற்று தடயங்களை நேற்று அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். அவர்களுக்கு, வரலாற்று தட-யங்கள் குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் விளக்கமளித்தார்.
