தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா


ADDED : மே 15, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக செவிலியர் தின விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்து பேசுகையில், ''உலகில் தாய்க்கு இணை யாரும் இல்லை. அத்தகைய தாய் பட்டத்தை பெற்றவர்கள் செவிலியர்கள்.

அவர்கள் நோயாளிகளிடம், எந்தவித வெறுப்பு, சலிப்பும் இல்லாமல், மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள். அவர்களின் உழைப்பும் தியாகமும் போற்றப்பட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கேக் வெட்டி இனிப்பு வழங்கி, பூங்கொத்து கொடுத்து செவிலியர்களை வரவேற்றனர். இதில், டாக்டர்கள் தேவிகா, சுபத்ரா, இளவரசன், பூபாலன், பாரதிராஜா, செவிலியர்கள் சித்ரா, கலைச்செல்வி, பவ்யா, கவுரி, வினோதினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us