தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 15, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த, மக்கள் விழிப்புணர்வு ஆண்டுதோறும் ஜூலை, 11ல், உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட தனியார் நர்சிங் கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

டி.ஆர்.ஓ., மஞ்சுளா, ஓசூர் சப்--கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மோகனபானு, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us